அவரை அவர் இஷ்டத்துக்கு விளையாட விட்டால் மிகப்பெரிய வீரராக மாறுவார் – ரோஹித் சர்மா உறுதி

Rohith

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை அடுத்து தற்போது இங்கிலாந்து அணிக்காக அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறிவரும் ரிஷப் பண்டிற்கு கடந்த சில நாட்களாகவே முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளம் மூலம் ஏகப்பட்ட பாராட்டுகளை அளித்து வந்தனர்.

Pant-3

ஒவ்வொருவரும் ரிஷப் பண்டின் திறமை குறித்து தங்களது பாராட்டுக்களை பொழிந்து வர தற்போது இந்திய அணியின் துணை கேப்டனும், அதிரடி வீரருமான ரோகித் சர்மா ரிஷப் பண்டின் எதிர்காலம் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் கடந்த சில தொடர்களாகவே அபாரமாக விளையாடி வருகிறார்.

அவரை அவர் போக்கில் விளையாட விட்டு விட வேண்டும். நிச்சயம் நல்ல மேட்ச் வின்னராக ஜொலிப்பார். அதை தவிர்த்து அவர்மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தவறானது. அவர் விளையாட்டை ஜாலியாக அனுபவித்து விளையாடினால் இன்னும் சிறப்பாக அவரால் செயல்பட முடியும். நாம் அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதைத்தான் இந்திய நிர்வாகம் செய்து வருகிறது.

Pant 1

ஒவ்வொரு தொடராக அவர் பல பாடங்களை கற்று தற்போது கைதேர்ந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார் என ரோகித் சர்மா பண்ட் குறித்து பாராட்டி பேசினார். மேலும் நாளை துவங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியில் தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் நிச்சயம் தனது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

pant 1

டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே வானவேடிக்கை காட்டும் பண்ட் அவருக்கு ஏற்ற வடிவமான டி20 என்றால் சொல்லவா வேண்டும். நாளைய போட்டியில் அவரது அதிரடிக்கும், சரவெடிக்கும் பஞ்சமே இருக்காது என ரசிகர்களும் அவர் குறித்து நல்ல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.