தோனியை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் வரலாற்றில் மகத்தான சாதனை படைத்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கும் மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விஜய் சங்கரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இரண்டு முக்கிய சாதனை படைத்துள்ளார். அந்த சாதனையை யாதெனில் கேப்டனாக அவர் 4 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார்.

இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 5324 ரன்களை அடித்துள்ளார். இதில் 39 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் 2864 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதம் மற்றும் 22 அரைசதங்கள் அடங்கும். இந்நிலையில் இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் மற்றொரு முக்கிய சாதனையாக தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

rohith 1

இந்த போட்டியில் 2 சிக்சர்களை அடித்த ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் 217 சிக்சர்களை விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக தோனி 216 சிக்சருடன் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

rohith 2

இதனை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி 201 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 198 சிக்ஸர்களுடன் அடுத்த அடுத்த இடத்தில் உள்ளனர். மும்பை அணி தற்போது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement