சனத் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனை துவக்க வீரராக முறியடித்த ரோஹித் – விவரம் இதோ

Rohith-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Pollard

அதன்படி தற்போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் 5 முடிவில் விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பூரான் 89 ரன்கள் அடித்தார். 5 ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய பொல்லார்ட் மற்றும் பூரான் ஜோடி 135 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய பூரான் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது 74 ரன்களில் 3 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 110 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை திணறடித்தது.

Ind

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கினை எதிர்த்து இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது இலங்கை அணியின் துவக்க வீரரான ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை ரோஹித சர்மா தகர்த்தார். அதாவது துவக்க வீரராக ஓராண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவராக ஜெயசூர்யா 2387 ரன்களுடன் (1997 ஆம் ஆண்டு) சாதனையை வைத்திருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் ரோஹித் 9 ரன்களை எடுத்தபோது இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 2388 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்தார். இந்த சாதனையை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த ரோஹித் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.