ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்படவுள்ள சீனியர் வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ind-2

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் நடந்து முடிந்துள்ள இந்த தொடரோடு சேர்த்து 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு வரை இந்திய அணிக்கு போட்டிகள் கிடையாது.

Cup

மேலும் அடுத்த 2020 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு முதல் தொடராக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் முதல் டி20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் துவங்க உள்ளது. 2 ஆவது போட்டி 7 ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாம் டி20 போட்டி 10 ஆம் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஏற்கனவே காயம் காரணமாக அணியில் இருந்த விலகி இருந்த இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ind

Shami

- Advertisement -

மேலும் இந்த தொடரில் கடந்த ஆண்டு ஓய்வின்றி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரான ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.