சிராஜ் மற்றும் பும்ரா மட்டுமல்ல. இன்னும் 2 பேரையும் உருவ கேலி செய்த ஆஸி ரசிகர்கள் – தொடரும் அட்டகாசம்

- Advertisement -

இந்திய பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பும்ராவை இனரீதியாக கடுமையாகத் தாக்கி இருக்கின்றனர் ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.

pujara 1

- Advertisement -

இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதில் புஜாரா மற்றும் கில் ஆகியோர் அரை சதம் விளாசியதே அதிகபட்சமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களான முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களாக அவர்களை இனரீதியாக அழைத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிராஜ், பும்ரா இருவரும் தங்களது கேப்டன் ரஹானேவிடம் புகார் செய்தனர். இதனை ரஹானே மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் செய்தார். மேலும் மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூனிடமும் இதுகுறித்து இந்திய அணி புகார் அளித்தது.

Siraj 2

இந்த சம்பவத்தை உறுதி செய்யும் வகையில் பிரபல பத்திரிகையாளர் போரியா மஜும்தாரும் தனது ட்விட்டர் மூலம் நடந்ததை தெளிவுபடுத்தினார். இது போன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்களை இனரீதியாக அடிக்கடி அழைத்து வம்பிழுத்து வருகின்றனர். இதற்கு முன்பும் இது போன்ற நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த செயலால் பும்ரா மாற்றும் சிராஜ் ஆகியோர் மிக மனவருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவர் மட்டுமின்றி சைனி மற்றும் ரோஹித் ஆகியோரது உருவங்களையும் ரசிகர்கள் கேலி செய்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

இதற்கு முன்னர் 2007இல் ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்சை ரசிகர்கள் சிலர் குரங்கு என்று இனரீதியாக அழைத்துள்ளனர். இதுபோன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் வீரர்களை இனரீதியாக அழைத்து சர்ச்சை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement