சேவாக் கம்பீர் சாதனையை முறியடித்த ரோஹித் ராகுல் ஜோடி – அட்டகாசமான ரெக்கார்ட் தான்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்திய அணியானது அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் இதே போன்று பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

indvsafg

- Advertisement -

நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக புதிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

அந்த சாதனையை யாதெனில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக கௌதம் கம்பீர் மற்றும் சேவாக் ஆகியோரது சாதனையே இருந்தது. அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை குவித்ததன் மூலம் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் கம்பீர் சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

rahul 1

நேற்றைய போட்டியில் 15வது ஓவரின் 4-வது பந்தில் ரோகித் 74 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 17-வது ஓவரில் ராகுல் 69 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement