கைக்குவந்ததை நழுவவிட்ட ரோஹித். சாமர்த்தியத்தை காண்பித்த புஜாரா – வைரல் வீடியோ

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுள் ஹாக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டாக அபு ஜாயித் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபு ஜாயித் பேட்டில் பட்ட பந்து இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரோஹித்தின் கைகளுக்கு சென்றது. ஆனால் பந்து ரோஹித்தின் கைகளில் பட்டு எகிறியது உடனே ரோஹித் பந்து எங்கே என்று தேட அதனை கவனித்த புஜாரா சாமர்த்தியமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இந்திய அணி 42 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் அடித்துள்ளது குய்ப்பிடத்தக்கது. புஜாரா 55 ரன்களில் ஆட்டமிழக்க கோலி 51 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Advertisement