அடேங்கப்பா ரோஹித் மற்றும் பாண்டியாவுக்கு இத்தனை கோடி சம்பளமா ? – தலை சுற்றவைக்கும் சம்பள விவரம் இதோ

MI
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் 2020 ஆம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது. அந்த வகையில் தற்போது மும்பை அணி வீரர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Rohith

- Advertisement -

இதுவரை அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியான மும்பை ஐபிஎல் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக திகழ்ந்து வருகிறது. நான்கு முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த முறையும் கோப்பையை வெல்ல ஆயத்தமாக இருக்கிறது.

அதன்படி தற்போது 2020ம் ஆண்டுக்கான மும்பை அணி சில வீரர்களை ஏலத்தில் எடுத்தது. குறிப்பாக 8 கோடி ரூபாய்க்கு நாதன் கல்டர் நைல் மற்றும் க்றிஸ் லின்னை 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி சார்பாக அதிக சம்பளம் பெறும் வீரராக கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அவர் இந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார்.

pandya-brothers

அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு 11 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து க்ருனால் பாண்டியா 8 கோடியே 80 லட்சம் ரூபாயும், வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு 7 கோடியும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 5.40 கோடி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement