இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோன்று தென்ஆப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.
இந்த போட்டியில் ரோகித் இன்னும் 8 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். கோலி சென்ற போட்டியில் அடித்த 72 ரன்கள் சேர்த்து 2441 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் 2434 ரன்களுடன் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றைய போட்டியில் முதலில் ரோஹித் கோலியின் சாதனை முறியடிப்பார். அதன் பின்னர் கோலி மீண்டும் ரோஹித்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியில் ரோஹித் மற்றும் கோலி இடையே நடக்கும் இந்த ரன்வேட்டை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.