ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த ரோஹித் – கில் ஜோடி – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.

pucovski 1

அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும் துவக்க வீரர் இடத்திற்கு ஒரு குறை இருந்தது. அதனை போக்கும் வகையில் இம்முறை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், நேதன் லையன் போன்ற பலமான பந்துவீச்சு கூட்டணிக்கு எதிராக இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

- Advertisement -

குறிப்பாக 27 ஓவர்கள் வரை களத்தில் நீடித்த இந்த ஜோடி 27வது ஓவரின் போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு ஆட்டக்காரரான கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் கில் ஜோடி ஒரு புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

gill 2

அந்த சாதனை யாதெனில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் தாக்குப் பிடித்த துவக்க ஜோடியாக இந்த ஜோடி சாதனை படைத்துள்ளது. 27 ஓவர்கள் வரை நின்ற இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு கடுமையான போராட்டத்தை அளித்திருந்தது. மேலும் கடந்த 14 இன்னிங்ஸ்களில் முதல் முறையாக அரைசதம் கடந்து இந்த ஜோடி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

gill 1

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை உறுதி செய்த கில் இந்தப் போட்டியிலும் அரை சதம் விளாசி உள்ளதால் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக நீடிப்பார் என்று தெரிகிறது. அதேவேளையில் அதிரடி வீரரான ரோகித்தும் 3 வடிவங்களான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது.

Advertisement