இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட 2 வீரர்கள் – விவரம் இதோ

ind-2

இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் முதல் இன்னிங்சில் அடித்த 161 ரன்கள் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது. இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா ஒன்பது இடங்களைத் தாண்டி 14 வது இடத்தைப் பெற உதவியது. இது நவம்பர் 2019 முதல் அவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த நிலை ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததன் பின்னர் கிடைத்தது. அந்த தொடருக்கு பின்பு அவர் 10ஆவது இடத்தைப் பிடித்தார்.

rohith

சென்னையில் உள்ள தனது சொந்த மைதானத்தில் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். அது அவரை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 14 இடங்களை தாண்டி 81ஆவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது, மேலும் போட்டியில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் அவர் பந்து வீச்சாளர்களில் ஏழாவது இடத்தில் இருக்கிறார், அவர் 33 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்று மூன்று புள்ளிகளை எட்டியுள்ளார்.

முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காத 58 ரன்கள் அவரது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை எட்டாத 11ஆவது இடத்தை எட்ட உதவி உள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 50 வது இடத்துக்கு திரும்பியுள்ளார். மேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆக்சர் படேல் 68 வது இடத்தில் தரவரிசையில் நுழைந்துள்ளார்.

ashwin 1

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆறு இடங்களைப் கடந்து 314 வது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்தைஇடத்துக்கு முன்னேறியுள்ளார். இருப்பினும் இங்கிலாந்து அணியின் பல வீரர்கள் தரவரிசையில் கீழே எறங்கினர் குறிப்பாக நட்சத்திர ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் தரவரிசையில் கீழே இறங்கியுள்ளார்.

- Advertisement -

rohith 1

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அஷ்வின் மற்றும் ரோஹித் ஆகியோரது ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.