ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும்மல்ல ஹிட்மேன் ரோஹித்தும் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை 26ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான அணியிலிருந்து மட்டுமின்றி இந்த தொடரில் இருந்தும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது அவர் பந்தினை தடுக்க முயன்று பலமான காயம் அடைந்தார். இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக அவருக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக துவக்க வீரர் ரோகித் சர்மா விளையாடுவதும் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் முதலாவது போட்டியில் போது துவக்க வீரராக விளையாடிய ரோஹித் ஐந்தாவது ஓவரில் இப்போது மார்க் வீசிய ஒரு அதிவேக பந்தில் வலது முழங்கையில் காயமடைந்தார்.

rohith1

காயத்திற்கு பிறகும் தொடர்ந்து பேட்டிங் செய்த ரோஹித் வலியுடனே பேட்டிங் செய்தார். மேலும் அந்த காயத்தின் மீது பேன்டேட் ஒட்டிக்கொண்டு விளையாடிய ரோகித் முதலாவது இன்னிங்ஸ் முடிந்து பீல்டிங் செய்ய வரவில்லை. எனவே அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

rohith 2

மேலும் ரோஹித்தின் காயம் குறித்து இன்னும் தெளிவான விளக்கம் வெளியாகாத நிலையில் நாளைய போட்டியில் ரோகித் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது. ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த பின்னடைவாக ரோகித் சர்மா குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.