
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மேட்ச் வின்னருமான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பாடர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணி எந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகளுமே இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை பும்ரா மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இந்து தொடரின் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும், ஒருமுறை 4 விக்கெட்டையும் அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பும்ரா தவிர்த்து வேறுயெந்த இந்திய வீரரும் பெரிய அளவில் சிறப்பாக பந்து வீசாத வேளையில் பும்ராவை கையாள்வது மிகவும் எளிது அவரை எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உண்டார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பும்ராவை கையாள்வது என்பது எனக்கு மிகவும் எளிதான வேலை. ஏனெனில் அவரிடம் நான் எந்த ஒரு விஷயத்தையும் பேசவே தேவையில்லை. ஏனெனில் அவருக்கே தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எப்பொழுதுமே தனது பந்துவீச்சை மிகவும் சிம்பிளாக வைத்துக் கொள்ளும் அவர் சரியான திட்டத்தை அவரே வகுத்து அவரே விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்.
கடந்த பல ஆண்டுகளாகவே நான் அவரை வழிநடத்தி வருகிறேன். அப்போதிலிருந்து இப்போது வரை நான் அவரிடம் எந்த ஒரு திட்டத்தையும் பற்றி பேசுவதே கிடையாது. ஆனாலும் பும்ரா அவருடைய பணியை சிறப்பாக செய்து விக்கெட்டுகளை தேவையானபோது வீழ்த்தி தருகிறார். அந்த வகையில் பும்ராவிற்கு இனியும் நான் எந்த ஒரு அறிவுரையையும் கூறப்போவது கிடையாது.
இதையும் படிங்க : இந்தியாவிற்கு அடிபணிந்த பாகிஸ்தான்.. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை அறிவிப்பு – விவரம் இதோ
அவருடைய திறன் மிகச் சிறப்பான ஒன்று. அதன் காரணமாகவே அவரால் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்க முடிகிறது. மேலும் அவரிடம் இருந்து இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கற்றுக் கொள்ளும் அளவிற்கு பல விடயங்கள் இருக்கின்றன என பும்ராவை பாராட்டி ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.