- Advertisement -
உலக கிரிக்கெட்

இன்னும் 3 ரன்கள் மட்டுமே தேவை.. ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் 2027 ஒருநாள் உலக கோப்பையை குறிவைத்து தனது அடுத்த கட்ட பயணத்தில் இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளிலும் அவர் தீவிரமாக இருக்கிறார்.

ஜாக் காலிஸின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா :

அந்தவகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாட இருக்கும் அவர் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவானன ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 252 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதம் மற்றும் 61 அரைசதம் என 11,577 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரராக ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

இவருக்கு முன்னதாக இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் ஜேக் காலிஸ் 11,579 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் அடுத்த போட்டியில் அவர் மூன்று ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 11,580 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரராக எட்டாவது இடத்திற்கு முன்னேறுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டியில் முதல் இந்திய வீரராக சுப்மன் கில் நிகழ்த்த காத்திருக்கும் – மாபெரும் சாதனை

இந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு இன்னும் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் அடுத்த போட்டியிலேயே ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்துவார் என்பது உறுதி. அதோடு 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் அவர் விளையாட வேண்டுமெனில் இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாக மாறியுள்ளது.

- Advertisement -