வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரோஹித்தின் இலக்கு இதுதான் – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது.

Rohith

- Advertisement -

அது யாதெனில் ஒரு நாள் தொடரில் சிறந்து விளங்கும் ரோகித் சர்மா டெஸ்ட் தொடர்களில் சறுக்கலையே சந்தித்து வருகிறார். அதற்கு காரணம் அவரது அதிரடி பேட்டி தான் ஏனெனில் டெஸ்ட் போட்டி என்பது உண்மையான திறமையை சோதிக்கும் ஒருவகை போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த கவனத்துடன் ஆடினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.

டெஸ்ட் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு அறிமுகமான ரோகித் சர்மா வாய்ப்புகளை அவ்வப்போதே பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக ரன் குவித்து டெஸ்ட் போட்டிகளிலும் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு இந்த தொடரில் விளையாட இருக்கிறார். இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 1585 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

rohith

பின்வரிசை வீரராக களமிறங்கும் ரோஹித் நிலைமைக்கு ஏற்றார்போல் நிலைத்து நின்று ஆடினால் டெஸ்ட் போட்டிகளிலும் அவரது இடம் உறுதி ஆகும். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடிய ரோஹித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஃபார்மில் இருக்கும் ரோஹித் இனி டெஸ்ட் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement