- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கப்போகும் முக்கிய நபர் – எல்லாம் அவர் கையில தான் இருக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜூன் 20-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான வீரர்களின் தேர்வை இதுவரை தேர்வுக்குழு இறுதி செய்யவில்லை. அடுத்த 2 மாதங்களுக்கு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் அதுவரை காத்திருக்கும் தேர்வுக்குழுவினர் ஐபிஎல் தொடருக்கு பின்னர் எந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கப்போகும் நபர் :

ஏற்கனவே அண்மையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. மேலும் அந்த தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா கடைசி போட்டியின் போது தானாகவே அணியிலிருந்து வெளியேறி பும்ராவை கேப்டனாக செயல்பட வைத்தார். இதன் காரணமாக ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர மாட்டார் என்றும் பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த வேளையில் அடுத்ததாக இந்திய அணி 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சுக்களும் இருந்து வந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பின்னர் பேசிய ரோஹித் சர்மா :

“இதுவரை தான் ஓய்வு குறித்த எந்த முடிவும் எடுக்கவில்லை”, என்றும் “ஓய்வு குறித்த எண்ணமும் எனக்கு இல்லை” என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று தெரிகிறது. ஆனாலும் தற்போது 37 வயதாகும் ரோஹித் சர்மா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 38 வயதை எட்டுவார் என்பதால் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவருடைய டெஸ்ட் கரியர் முடிவுக்கு வரலாம் என்றும் பேசப்படுகிறது.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தொடர்வாரா? அல்லது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு துவக்க வீரராக மட்டுமே செயல்படுவாரா? என்பது போன்ற அவரது கரியரின் முக்கிய முடிவை எடுக்கப்போகும் பொறுப்பு தற்போது கௌதம் கம்பீரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவின் மீது பிசிசிஐ-யும், தேர்வுக்குழுவும் அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்ய வாய்ப்பில்லை.

இதையும் படிங்க : இந்த 11 பேர் தான் சி.எஸ்.கே டீமுக்கான பிளேயிங் லெவனுக்கு செட்டாவாங்க.. தேர்வு செய்து அறிவித்த – அம்பத்தி ராயுடு

ஆனாலும் அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள மூன்று ஐசிசி கோப்பைகளை கருத்தில் கொண்டு தனித்தனி அணியை உருவாக்குவேன் என்று கூறியிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரோகித் சர்மாவின் எதிர்காலம் கௌதம் கம்பீரின் கையிலே இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 2025 ஐபிஎல் தொடர் முடிந்து கௌதம் கம்பீர் எடுக்கப்போகும் முடிவு தான் ரோகித் சர்மாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -