ரொம்ப நாள் ஆச்சு.. இது ரொம்ப முக்கியம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின்னர் – ரோஹித் சர்மா பேச்சு

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தேன் : ரோஹித் சர்மா

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக ஜாஸ் பட்லர் 52 ரன்களையும், ஜேக்கப் பெத்தல் 51 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது :

38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் சுப்மன் கில் 87 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களையும், அக்சர் படேல் 52 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாடி ரொம்ப காலம் ஆகிவிட்டது. எனவே சரியான நேரத்தில் இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். அந்த வகையில் இந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக துவங்கி இருந்தனர்.

இதையும் படிங்க : எனக்கு முன்னாடியே பிரமோஷன் கிடைக்கும் என்று தெரியும்.. காரணத்தை கூறிய – அக்சர் படேல்

ஆனாலும் மீண்டும் எங்களது பந்துவீச்சார்களால் ஆட்டத்திற்குள் வந்தோம். அதேபோன்று இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஒட்டுமொத்தமாகவே நமக்கு அணியின் இந்த செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது என ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement