
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அனியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தனர். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :
இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்டத்திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை.
சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்படும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.
இதையும் படிங்க : இத்தனை வருஷ கரியரில் விராட் கோலிக்கு இப்படி நடப்பது இதுவே முதல்முறை – பரிதாப விவரம் இதோ
இந்த தொடரின் மூலம் சில விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.