ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலாக இந்த தொடரை தொடங்கியுள்ளது.
அதற்கு அடுத்து இந்த உலக கோப்பை தொடரில் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில் : 7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடியிருந்தோம். அந்த போட்டியில் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றது போன்று இந்த டி20 உலககோப்பை போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்போம்.
இதில் பெரிய மாற்றம் எதுவும் கிடையாது. எப்போதுமே நமது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் உள்ளது. தற்போது இந்த டி20 தொடரை நாங்கள் மிகச் சிறப்பாக துவங்கி உள்ளோம். இந்த ஆட்டத்தை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம். ஆனாலும் நியூயார்க் ஆடுகளங்களை பற்றி புரிந்து கொள்வது எனக்கு கடினமாக இருக்கிறது.
இந்த ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் சவாலான ஒன்று. ஏனெனில் ஆடுகளங்களை சீரமைப்பவர்களும், ஆடுகளங்களை பராமரிப்பவர்களுமே இந்த மைதானத்தின் தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது எனக்கும் இந்த மைதானத்தின் தன்மையை கணிக்க கடினமாக இருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியா விராட் கோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பல.. அதான் இந்த முடிவை எடுத்தேன்.. கேப்டன் ரோஹித்
ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இருந்தாலும் எவ்வளவு விரைவாக இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு எங்களை தகவமைத்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக நாங்கள் மைதானத்திற்கு ஏற்றார் போல் செயல்படுவோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



