இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் ப்ரெண்டன் கிங் 68 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தாமஸ் 31 ரன்களையும் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வியின் மூலம் தற்போது தொடரை (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

முதலில் நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை என்பதே உண்மை. இந்த மைதானத்தில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் கிடையாது. நாங்கள் பேட்டிங் செய்யும் விதத்தில்தான் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறி விட்டோம். ஆனால் இதுபோன்று சிலமுறை நடக்கத்தான் செய்யும். ஒரு பேட்டிங் குரூப்பாக நாங்கள் சரியாக செயல்படவில்லை.
எல்லா நாட்களும் நமக்கு சாதகமான நாட்களாகவே அமைந்திடாது. அதேபோன்று எல்லா நாளும் வெற்றியாகவும் இருக்காது. இதுபோன்ற தோல்விகளிலிருந்தும் சில பாடங்களை நாம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாகவே வெளிப்படுத்தி பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : சீக்கிரமே பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் இந்திய முதலாளிகளின் வேலைக்காரார்களாக செயல்படுவாங்க – முன்னாள் வீரர் கணிப்பு
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்தை காண வேண்டும். இருப்பினும் ஒரு விடயத்தை மட்டும் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். பேட்டிங்கில் எங்களுடைய அதிரடி நிச்சயம் தொடரும். எங்களுடைய அப்ரோச்சில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்த ஒரு தோல்விக்காக நாங்கள் பயப்பட போவதும் கிடையாது. இனியும் தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடியாகவே விளையாட முயற்சிப்போம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



