
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 7-ம் தேதி துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்கிற நிலையில் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணி மொத்தமாக சரிவை கண்டு 234 ரன்களில் தங்களது இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது மட்டுமிண்டி உலக டெஸ்ட் சாம்பியனாகவும் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் டாசில் வெற்றி பெற்று சிறப்பாகவே துவங்கியதாக நினைக்கிறேன். முதலில் அவர்களை பேட்டிங் செய்ய வைத்து முதல் இன்னிங்ஸ்சின் முதல் ஸ்செஷனில் மிகச் சிறப்பாக பந்துவீசினோம். ஆனால் அதன்பிறகு ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டனர்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விகிதத்திற்கு அவர்களுக்கு கிரெடிட் கொடுத்துத்தான் ஆக வேண்டும். டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் சேர்ந்து அமைத்த பாட்னர்ஷிப் எங்களை பின்னுக்கு தள்ளியது. இது போன்ற நிலையிலிருந்து கம்பேக் கொடுப்பது என்பது மிகவும் கடினம். ஆனாலும் எங்களது பேட்ஸ்மேன்களும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருந்தாலும் நாங்கள் இறுதிவரை சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன். நான்கு ஆண்டுகளாக இதற்காக நாங்கள் கடினமாக உழைத்து உள்ளோம். இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு சென்று விளையாடுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான சாதனை தான். ஆனாலும் நாங்கள் ஒரு மைல் முன்னால் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் எங்களிடம் இருந்து கிரெடிட்டை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதற்காக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். ஒரு அணியாக இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் எங்களது செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இதையும் படிங்க : நீங்கல்லாம் பேடிஎம், ஐபிஎல் ஜெயிக்க தான் லாய்க்கி – 2014 முதல் சொதப்பும் நம்பர் ஒன் இந்தியா, வேதனையில் விளாசும் ரசிகர்கள்
இந்த மைதானத்தில் ரசிகர்கள் மிகச் சிறப்பாக எங்களுக்கு ஆதரவளித்தனர். நாங்கள் ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தும் போதும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நிகழவைத்தது என ரோகித் சர்மா தோல்வி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.