எனக்கு அந்த டீமை ரொம்ப புடிக்கும்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது குறித்து – ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தது. பாகிஸ்தானில் நடைபெறயிருந்த இந்த தொடரானது பாதுகாப்பு காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது குறித்து : ரோஹித் சர்மா பேட்டி

இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்திய அணி 2 ஐசிசி சாம்பியன் டிராபி பட்டங்களை வென்று அசத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியை தான் பெரிதும் விரும்புவதாகவும் அந்த தொடரில் வெற்றி பெற்றது குறித்தும் ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி.

இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றது ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு உழைப்பு பற்றியது அல்ல. பலமுறை நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி அருகில் வந்து அந்த கோப்பையை கைப்பற்ற முடியாமல் சென்றுள்ளோம். ஆனால் தற்போது அனைத்துமே சிறப்பாக நடந்து கோப்பையை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. ஒன்று இரண்டு வீரர்களால் இதை செய்ய முடியாது.

- Advertisement -

ஒரு அணியாக சிறப்பாக விளையாடியதனாலே நாங்கள் இந்த தொடரை வென்று இருந்தோம். அடுத்தடுத்து டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு கோப்பைகளையும் கைப்பற்றியதில் மகிழ்ச்சி தான் என்று ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 116க்கு ஆல் அவுட்.. 5க்கு 5 வெற்றி.. ஆஸியை சொந்த ஊரில் 1.5 நாளில் டபுள் ஒய்ட்வாஷ் செய்த இளம் இந்தியா

எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்காரணமாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement