- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா இல்லாமலும் நாங்க சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அசத்தியது. இதன் மூலம் அதிகமுறை சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியாக ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது.

பும்ரா இல்லாமலும் நாங்க ஜெயிக்க இதுவே காரணம் : ரோஹித் சர்மா

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முடிந்து ஜியோ ஹாட்ஸ்டார் உடன் நடைபெற்ற பிரத்தியேகமாக உரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொண்டார்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் நாங்கள் 5 டாஸ்களை தொடர்ச்சியாக இழந்தோம். ஆனால் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். இந்த தொடரில் தோல்வியின்றி இறுதிவரை சென்று வெற்றி பெறுவது சவாலான ஒன்று.

ஆனால் அதையும் நாங்கள் சாதித்து இருக்கிறோம். இந்த தோப்பையை கைப்பற்றியது மிகச்சிறப்பான ஒரு உணர்வு. அதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒட்டுமொத்தமாக அனைவரது உழைப்பும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பொறுப்புகளை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டனர். அதனாலே இது போன்ற அற்புதமான வெற்றி கிடைத்தது.

- Advertisement -

அதேபோன்று பும்ரா அணியில் இல்லை என்பதற்காக முன்னேற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே செய்திருந்தோம். பும்ரா இல்லாமலும் நாங்கள் வெற்றிபெற காரணம் யாதெனில் : அவருக்கான சரியான மாற்று திட்டங்களை கையில் வைத்திருந்தோம். அந்த வகையில் முகமது ஷமி எப்பொழுதுமே ஐசிசி தொடர்களின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துபவர். அவர் இந்த அணியில் இருந்தது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

இதையும் படிங்க : கோலி அப்படி எதுவும் பண்ணல.. ராபின் உத்தப்பாவின் குற்றச்சாட்டை நிராகரித்த அம்பத்தி ராயுடு – விவரம் இதோ

அதேபோன்று இளம் வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் மீதும் நாங்கள் முழு நம்பிக்கையை வைத்திருந்தோம். பும்ரா இல்லாததால் இந்த தொடருக்கு முன்னதாகவே 20-25 நாட்கள் பயிற்சிகளையும், சரியான திட்டங்களையும் வகுத்திருந்தோம். இந்த முன்னேற்பாடுகள் தான் பும்ரா இல்லாமலும் நாங்கள் வெற்றிபெற உதவியது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -