இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
கண்டிப்பாக மைதானத்தில் ஒரு இடத்தில் நான் இருப்பேன் : ரோஹித் சர்மா
இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா அந்த தொடருடன் ஓய்வு பெற்றதால் இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் தான் விளையாடாமல் வெளியில் இருந்து பார்க்கப்போவது சில கருத்துக்களை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் அறிமுகமானதிலிருந்து ஒவ்வொரு உலக கோப்பையிலும் நான் பங்கேற்று விளையாடி இருக்கிறேன்.
ஆனால் இம்முறை அணியில் இல்லாமல் வெளியில் இருந்து பார்ப்பது புதுமையாக இருக்கும். உலக கோப்பையை தவறவிடும் போது தான் அதன் எதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டேன். இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான் இல்லை என்றாலும் நிச்சயம் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து நான் போட்டியை பார்ப்பேன்.
இதையும் படிங்க : என்னோட சிம்பிள் பிளான் இதுதான்.. என் அதிரடிக்கும் அதுதான் காரணம் – ரிங்கு சிங் பேட்டி
இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரையும் வெற்றி பெற வேண்டும். அதுவே என்னுடைய விருப்பம் என்றும் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடப்பட்டது. இம்முறை 2026 டி20 உலககோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



