வான்கடேவில் மெகா கெளரவம்.. அம்மா, அப்பாவுக்கு மரியாதை செய்த ரோஹித்துக்கு.. முதல்வர் கோரிக்கை

Rohit Sharma
- Advertisement -

மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மே 16ஆம் தேதி ரோஹித் சர்மா ஸ்டேண்ட் திறக்கும் விழா நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் உள்ளூரில் மும்பைக்காக விளையாடி 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய அவர் மிடில் ஆடரில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வந்தார்.

அதை கவனித்த அப்போதைய கேப்டன் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராஃபியில் அவருக்கு துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய ரோகித் சர்மா நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

ரோஹித்துக்கு கெளரவம்:

அதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவுக்கு இந்தியாவின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்ற இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் ஜாம்பவான் தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தது உட்பட நிறைய சாதனைகளை படைத்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அப்படி தங்களுடைய மாநிலத்திலிருந்து சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரோஹித் சர்மாவுக்கு வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டேண்ட்டுக்கு ரோஹித் சர்மாவின் பெயரைச் சூட்டி மும்பை வாரியம் கௌரவித்தது. அதை திறக்கும் விழா இன்று நடைபெற்றது.

- Advertisement -

பெற்றோர்களுக்கு மரியாதை:

அந்த விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் பிசிசிஐ – ஐசிசி தலைவர் சரத் பாவார் மற்றும் மும்பை வாரிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் ரோகித் சர்மாவை அந்த ஸ்டாண்டை திறப்பதற்காக அழைத்தனர். அப்போது மேடையிலிருந்து கீழே சென்ற ரோஹித் தன்னுடைய அம்மா, அப்பாவை மேடைக்கு அழைத்து வந்து அந்த ஸ்டேண்ட்டை திறக்குமாறு மரியாதை செய்தார்.

இதையும் படிங்க: சிட்னியில் ரோஹித் கதையே மாத்திருப்பாரு.. கம்பீர் தப்பை நான் பண்ணிருக்க மாட்டேன்னு சொன்னேன்.. சாஸ்திரி

இறுதியில் முதல்வர் மற்றும் ரோஹித் சர்மாவின் பெற்றோர்கள் ஆகியோர் கோலாகலமாக ரோஹித் சர்மா ஸ்டேண்ட்டை திறந்து வைத்தனர். அந்த விழாவில் முதல்வர். “ரோஹித் சர்மாவின் சிக்ஸ் இந்த ஸ்டேண்டில் விழுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்று பேசினார். அதாவது உங்களுடைய ஸ்டேண்டில் விரைவாக சிக்ஸர் அடியுங்கள் என்று முதல்வர் ரோஹித்துக்கு கோரிக்கை வைத்தார்.

Advertisement