- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவை விட எனக்கு அது முக்கியமில்ல.. ஆஸ்திரேலியா என்னை காத்துலயே கரைக்க பாத்தாங்க.. ரோஹித் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை 90% நாக் அவுட் செய்து இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 205/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 92 (41) ரன்கள் விளாசினார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டோனிஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவே முக்கியம்:
இதனால் செமி ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மறுபுறம் ஆப்கானிஸ்தானை அதன் கடைசி போட்டியில் வங்கதேசம் வீழ்த்தினால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் வருவதற்கு அசாத்தியமான வாய்ப்புள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 92 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டி நடைபெற்ற திறந்த வெளி செயின் லூசியா மைத்தானத்தில் காற்றை வைத்து ஆஸ்திரேலியா தம்மை அவுட்டாக்க முயற்சித்ததாக ரோகித் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவை விட தமக்கு அரை சதம், சதம் போன்ற சாதனைகள் முக்கியமல்ல என்று தெரிவிக்கும் அவர் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை உடைத்தது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பவர் பிளே ஓவர்களில் பவுலர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் அதிரடியாக விளையாடுவதே என்னால் முடிந்தது. எனக்காக அவர்கள் திட்டத்தை மாற்றி காற்றுக்கு எதிராக பந்து வீசினார்கள். அங்கே நீங்கள் சாதுரியமாக இருக்க வேண்டும். எனக்கு நானே ஆதரவு கொடுத்துக் கொண்டேன். பவுலர்கள் காற்று அடிக்கும் மேகத்தில் வீச மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் சாதுரியமாக பேட்டிங் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: 24 ரன்ஸ்.. இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி.. ஆட்டநாயகனாக ரோஹித் வரலாற்று சாதனை.. ஆஸிக்கு வாய்ப்புள்ளதா?

“முடிந்தளவுக்கு அனைத்தையும் அடிக்க நான் நினைத்தேன். களத்தின் அனைத்து பகுதிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் நான் முயற்சித்தேன். இது போன்ற நல்ல பிட்ச்சில் உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுத்து அடிக்க வேண்டும். அது இன்று எனக்கு வந்தது. 50, 100 ரன்கள் முக்கியமல்ல என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன். பவுலர்கள் மீது அழுத்தத்தை போட வேண்டும். அதற்கு நீங்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். அதற்காக களத்தின் ஒருபுறம் மட்டுமின்றி அனைத்து திசைகளையும் பயன்படுத்த முயற்சித்தேன்” என்று கூறினார்.

- Advertisement -