டெஸ்ட் அனுபவம் ஹெல்ப் பண்ணுச்சு.. பாகிஸ்தானுக்கு எதிரா இதை செய்யப் போறோம்.. கேப்டன் ரோஹித் பேட்டி

Rohit Sharma 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் ஐந்தாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கெராத் டிலானி 26 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு விராட் கோலி 1, சூரியகுமார் யாதவ் 2 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 52* (37), ரிஷப் பண்ட் 36* (26) ரன்கள் அடித்து 12.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளை பெற்ற இந்தியா இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் போட்டிக்கு திட்டம்:
மேலும் ஜூன் ஒன்பதாம் தேதி இதே மைதானத்தில் இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இருப்பினும் பயிற்சி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராகவும் இப்போட்டியில் அயர்லாந்துக்கு எதிராகவும் விளையாடிய தங்களால் இதுவரை பிட்ச்சை முழுமையாக கணிக்க முடியவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போட்டியை பற்றி இப்போதே அவர் பேசியது பின்வருமாறு.

“எனது கையில் லேசான அசௌகரியம் ஏற்பட்டது. டாஸ் வீசிய போதும் இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியவில்லை என்று சொன்னேன். 5 மாதங்கள் மட்டுமே பழைய இந்த பிட்ச்சில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. 2வது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்த பின்பும் அது செட்டிலானதாக தெரியவில்லை. இருப்பினும் அதில் பவுலர்களுக்கு நிறைய உதவி கிடைத்தது”

- Advertisement -

“அர்ஷ்தீப் தவிர்த்து எங்களுடைய அனைத்து வீரர்களும் நிறைய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். ஆரம்பத்திலேயே அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் தான் எங்களுக்கு இப்போட்டியில் வெற்றிக்கான வழியை கொடுத்தது. அடுத்த போட்டியில் 4 ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் சமநிலை இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். சுழல் பின்னர் தன்னுடைய வேலையை செய்யும். இன்று 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியும் 2 சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை வைத்து நாங்கள் சமாளித்தோம்”

இதையும் படிங்க: 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா.. பண்ட் அசத்தல்.. 4000 ரன்ஸ்.. ஹிட்மேன் ரோஹித் புதிய உலக சாதனை

“ஆனால் உண்மையில் பிட்ச்சில் என்ன எதிர்பார்த்தம் வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இதே போன்ற சூழ்நிலை இருந்தால் அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம். அது 11 வீரர்களும் சேர்ந்து வெற்றிக்கு பங்காற்றக்கூடிய போட்டியாக இருக்கலாம். இது கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எந்த மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற புரிதலை கொடுக்கிறது” எனக் கூறினார்.

Advertisement