அவங்க இல்லாமையே 3வது டெஸ்டில் இந்தியா ஜெயிக்க அது தான் காரணம்.. கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma 4
- Advertisement -

ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 319 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214*, கில் 91, சர்பராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 ரன்களை துரத்திய இங்கிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 122 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரோஹித் மகிழ்ச்சி:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் ஷமி, பாதியிலேயே வெளியேறிய அஸ்வின் போன்ற முக்கிய பவுலர்கள் இல்லாமல் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு டாஸ் அதிர்ஷ்டம் உதவியதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மேலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் அசத்தியத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நீங்கள் 2 – 3 நாட்களுக்கு மேல் விளையாடுவதில்லை. நாங்கள் 5 நாட்களும் விளையாடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துள்ளோம். அதில் நன்றாக விளையாடிய நாங்கள் அழுத்தத்தை எதிரணி மீது போட்டோம்”

- Advertisement -

“எங்களுடைய பந்து வீச்சில் கிளாஸ் இருப்பதால் பொறுமையாக செயல்படுவோம் என்பதே என்னுடைய மெசேஜாக இருந்தது. அந்த வகையில் நாங்கள் 3வது நாளில் கம்பேக் கொடுத்ததற்கு பெருமையடைகிறேன். அது நடக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய அனுபவத்தைக் கொண்ட ஜடேஜாவுடன் இடது – வலது கை கலவையை வேண்டுமென நாங்கள் விரும்பியதால் சர்ப்ராஸ் கானை இறக்கினோம். சர்பராஸ் கான் எப்படி விளையாடுவார் என்பதை நாங்கள் பார்த்தோம்”

“அனைத்தையும் நாங்கள் கணக்கிட்டு பின்னர் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் வரிசையில் செயல்பட்டோம். நிறைய திருப்புமுனைகள் இருந்தது. இந்தியாவில் வெல்வதற்கு டாஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய பவுலர்கள் நிறைய போராட்டத்தை காண்பித்தனர். இந்த நேரத்தில் முக்கிய பவுலர்கள் இல்லாமல் நாங்கள் விளையாடினோம் என்பதை மறக்கக்கூடாது”

இதையும் படிங்க: இப்போவும் சொல்றேன் அதை செய்யாம விடமாட்டோம்.. தோல்விக்கு பின்பும் இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த ஸ்டோக்ஸ்

“பேட்டிங்கிலேயே பாதி வேலை முடிந்தது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக இந்த இரண்டு இளம் வீரர்கள் அசத்தினார்கள். ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பராக பந்து வீசினார். ஜெயஸ்வால் பற்றி நான் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நிறைய பேசி விட்டேன். அவரைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. கேரியரை உச்சமாக துவங்கியுள்ள நல்ல வீரரான அவர் தொடர்ந்து இதே போல விளையாட விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement