இறுதிபோட்டியில் மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா !

sharma
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது .பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

RohitSharma

- Advertisement -

ரோகித்சர்மா அரைசதம் அடித்திருந்த போதிலும் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்களை குவித்து நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். வெற்றிக்கு பின்னர் ரோகித்சர்மா டிவிட்டரில் மறக்கமுடியாத நிகழ்வென்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸரின் காரணமாக வென்ற இந்திய அணியின் வெற்றையை கொண்டாடிடும் விதமாக சச்சினின் தீவிர ரசிகரான சுதிரை இலங்கை ரசிகர் ஒருவர் தூக்கிக்கொண்டு மைதானத்தை சுற்றிவந்தார். இந்திய அணியின் வெற்றியை இலங்கை ரசிகர்களும் கொண்டாடிய அந்த தருணத்தை ரோகித்சர்மா சமூகவலைத்தளத்தில் பதிந்து மறக்கமுடியாத நினைவு என்று கூறியுள்ளார்.

Advertisement