- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி பைனல் முடிந்த கையோடு முக்கிய முடிவை கையிலெடுக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாயில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுப்போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அசத்தியது.

ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு :

குரூப் ஏ சுற்றின் முடிவில் முதலிடத்தினை பிடித்த இந்திய அணியானது அரையிறுதி போட்டியின் போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான மாபெரும் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வுபெற முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரோகித் சர்மா 38 வயது நிறைவு செய்வார் என்பதனால் முன்கூட்டியே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் நிச்சயம் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

இருப்பினும் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றாலும், வெல்லாவிட்டாலும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஷமி, கம்பீர் மாற்றி பேசினாலும்.. மஹாபாரத கிருஷ்ணர் மாதிரி இது இந்தியாவுடன் ஃபைனலில் இருக்கு.. ஆகாஷ் சோப்ரா

இந்திய அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் இதுவரை 272 போட்டியில் விளையாடி 32 சதம் மற்றும் 57 அரைசதம் என 11,092 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -