டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த – ரோஹித் சர்மா

Rohit-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு சூப்பர் ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்து 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா படைத்த சாதனை யாதெனில் :

இந்த போட்டியின் போது முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கையில் ரோகித் சர்மா 46 ரன்களை எடுத்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்திருந்த விராட் கோலியின் சாதனையை கடந்து அதிக ரன்கள் கேப்டனாக குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் முடிவில் 121 ரன்கள் குவித்த ரோகித் சர்மா தற்போது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக மட்டும் 1647 ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 1570 ரன்களுடனும், அதன் பின்னர் தோனி 1112 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க : பரபரப்பான நேரத்தில் அஸ்வின் மாதிரி யோசிச்சது வேற லெவல்.. ரோஹித்தை பாராட்டிய டிராவிட்

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு சதங்களை விளாசியிருந்த ரோகித் சர்மா தற்போது 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு தனது ஐந்தாவது டி20 சதத்தை விளாசியுள்ளார். எதிர்வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெறுவாரா? மாட்டாரா? என்று அனைவரும் பேசிவந்த வேளையில் அவரது இந்த அற்புதமான ஆட்டம் அவரது இடத்தினை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement