ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒய்ட்வாஷ் அவமானத் தோல்வியைத் தவிர்த்தது. அந்தப் போட்டியில் 237 ரன்களை துரத்திய இந்தியா 38.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு விராட் கோலி 74*, ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்களை அடித்து முக்கிய பங்காற்றினார்கள். அதனால் 2027 உலகக் கோப்பையில் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தனர். இந்நிலையில் வயதானாலும் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
புதுசா ஆரம்பிக்கிறோம்:
மேலும் 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து தங்களுடைய பயணத்தைப் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் துவங்கியுள்ளதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் “2 வயதான நாய்களுக்கு இன்னும் வாலில் கொட்டும் திறன் இருக்கிறதோ?” என்று தொகுப்பாளர் ரவி சாஸ்திரி கலக்கப்பாக கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டு சிரித்த ரோஹித் சர்மா பதிலளித்தது பின்வருமாறு.
“நீங்கள் சொல்வது உண்மை போல் தெரிகிறது. நாங்கள் எங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறோம். நீங்கள் என்ன சாதனைகளைச் செய்திருந்தாலும் உங்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது களத்தில் புத்துணர்ச்சியுடன் புதிதாக துவங்க வேண்டும் என்பது முக்கியம். அதையே ஆஸ்திரேலியாவுக்கு வந்ததும் நாங்கள் செய்தோம்”
ரோஹித் அறிவிப்பு:
“கடந்த 15 – 17 வருடங்களில் என்ன நடந்தது எப்படி விளையாடினோம் என்பதை மறக்க வேண்டும். போட்டிகளை புதிதாக ஆரம்பிக்க விரும்புகிறேன். அப்படித் தான் நான் விளையாடியப் போட்டிகள் அனைத்தையும் பார்த்தேன். இது விராட் கோலிக்கும் பொருந்தும் என்று நான் உறுதியாக சொல்வேன். இங்கே விளையாடிய 3 போட்டிகளையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஹர்ஷித் ராணாவை அதுக்காக செத்துக்கிட்டு இருக்கோம்.. இந்தியாவுக்காக 2 வேலையையும் செய்வார்.. கில் பேட்டி
அதை அருகில் இருந்த கேட்ட விராட் கோலி தமது சார்பாக பேசிய ரோஹித்தை மகிழ்ச்சியுடன் பார்த்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடுவதாக கருதுவதால் தங்களுக்கு ஆதரவளித்த ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட், ரோஹித் நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விராட், ரோஹித் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



