ஒருநாள் போட்டியிலும் இதைத்தான் செய்யபோகிறேன்..! ரோஹித் ஷர்மா அதிரடி..! – காரணம் இதுதான்..?

இங்கிலாந்து சுற்று பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கண்ணகில் வெற்றி பெற்றது . இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் தான் எப்படி விளையாட போகிறேன் என்று தனது வியூகத்தை தெரிவித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
sharma
டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிக்கு பின்னர் இரு அணிகளும் 1-1 சமநிலையில் இருந்தது. டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் 56 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று (ஜூலை 12) நோட்டிங்ஹம்மில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தான், எப்படி விளையாட போகிறேன் என்று கூறியுள்ள ரோஹித் ஷர்மா” ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதில் நான் மிகவும் கண்டிப்பாக உள்ளேன்.
sharma
ஐபிஎல் போட்டிக்கு பின்னர் நான் நிறைய போட்டிகளை விளையாடவில்லை .இதனால் என்னால் எவ்வளவு சீக்கிரம் அதிரடி ஆட்டத்தை தொடங்க முடிகிறதோ அவ்வளவு விரைவில் நான் அதிரடியாக விளையாட துவங்க வேண்டும் என்பதில் நான் கண்டிப்பாக இருக்கிறேன். இதை தான் நான் இந்த தொடரில்செய்யப்போகிறேன் ” என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.