ரோஹித் மாறல.. ஆனா அவர் புகழ் வந்ததும் பேசுறது கூட இல்ல.. ஆளே மாறிட்டாரு.. மிஸ்ரா ஆதங்கம்

Amit Mishra
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அது அவர்களின் ஏராளமான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதில் ரோகித் சர்மா களத்தில் பொறுமையாக இருந்து பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர்.

குறிப்பாக அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டு எதிரணிகளை பந்தாடுவதில் வல்லவரான அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மறுபுறம் அதற்கு நேர்மாறாக விராட் கோலி களத்தில் சாதாரண விக்கெட் விழுந்தாலே அதை வெறித்தனமாக கொண்டாடி தீர்ப்பார். ஆனால் பேட்டிங்கில் மிகவும் நங்கூரமாக விளையாடக் கூடிய அவர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் குவித்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் வல்லவர்.

- Advertisement -

மிஸ்ரா ஆதங்கம்:
இந்நிலையில் முதல் முறையாக சந்தித்த போது ரோகித் சர்மா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருப்பதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் புகழ், அதிகாரம் வந்ததும் தம்மிடம் விராட் கோலி பேசுவது கூட கிடையாது என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் பொய் சொல்ல மாட்டேன். ஒரு கிரிக்கெட் வீரராக அவரை நான் மிகவும் மதிக்கிறேன”

“ஆனால் சச்சின் அல்லது தோனிக்கு நிகராக வைத்திருந்த அதே மதிப்பை இப்போதும் நான் கொண்டிருக்கவில்லை. ஏன் விராட் கோலி குறைந்த நண்பர்களைக் கொண்டுள்ளார்? விராட் மற்றும் ரோஹித் ஆகியோரின் இயற்கை வித்தியாசமானது. ரோகித்தின் சிறந்த விஷயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். அவரை முதல் நாள் பார்த்த போதும் இப்போது பார்த்த போதும் ஒரே நபராக இருக்கிறார்”

- Advertisement -

“அதனால் அவருடன் நீங்கள் சம்மந்தப் படுத்த முடியுமா அல்லது சூழ்நிலையால் மாறுவார்களா? இந்திய அணியில் நான் நீண்ட வருடங்கள் இல்லை. ஆனால் இப்போதும் ரோகித்தை பார்க்கும் போது என்னுடன் அவர் கிண்டலாக பேசுவார். தற்போது உலகக் கோப்பை, 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் உயரே உள்ளார். ஆனால் நாங்கள் அதை நட்பை தொடர்கிறோம். இருப்பினும் விராட் நிறைய மாறியுள்ளதை பார்க்கிறேன். கிட்டத்தட்ட நாங்கள் இப்போது பேசுவதை நிறுத்திக் கொண்டோம்”

இதையும் படிங்க: மன்னிச்சுடுங்க உண்மையா அந்த அர்த்தத்தில் செய்யல.. யுவி, ரெய்னா சார்பிலும் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்

“புகழும் அதிகாரமும் வரும் போது மக்கள் நம்மை வேண்டுமென்றே தொடர்பு கொள்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. சீக்குவை (விராட்) எனக்கு ஒவ்வொரு இரவும் சமோசா, பீட்சாவை சாப்பிட்ட 14 வயது முதல் தெரியும். ஆனால் அந்த சீக்குவுக்கும் சமீபத்திய கேப்டன் விராட் கோலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இப்போதும் அவர் என்னை பார்க்கும் போது மதிப்பை வெளிப்படுத்துவார். ஆனால் அவர் அதே பழைய விராட் கோலி கிடையாது” என்று கூறினார்.

Advertisement