IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றின் மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit Sharma Duck Out
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் தங்களது பேட்டிங்கை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்தது.

CSK vs MI

- Advertisement -

பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்து 6 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் விளையாடும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கேமரூன் க்ரீன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினார்கள்.

Rohit Sharma

ஆனாலும் இந்த ஜோடியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. அணியின் எண்ணிக்கை 13-ஆக இருந்தபோது 6 ரன்கள் எடுத்திருந்த கேமரூன் க்ரீன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ரோகித் சர்மா மூன்றாவது வீரராக களத்திற்கு வந்தார். ஆனால் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் தற்போது ரோகித் சர்மா முதல் இடத்திற்கு சென்றுள்ளார். ரோஹித் சர்மா இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் 16 முறை டக் அவுட்டாகி முதலிடத்திற்கு சென்றுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், மந்தீப் சிங் ஆகியோர் 15 முறை டக் அவுட்டாகி இரண்டாவது இடத்திலும், அம்பத்தி ராயுடு 14 முறை டக் அவுட்டாகி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : டான் ப்ராட்மேனுக்கு எங்க பாபர் அசாம் கொஞ்சமும் குறைஞ்சவர் இல்ல – முன்னாள் பாக் வீரர் பாராட்டு, கலாய்க்கும் ரசிகர்கள்

அவர்களை தொடர்ந்து ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே (தலா 13 முறை), கவுதம் கம்பீர் (12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோர் (தலா 10) முறை டக் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement