- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் துருப்பு சீட்டே இவர்தான் – ரோஹித் சர்மா கணிப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர்தான் : ரோஹித் சர்மா

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் விளையாட இருப்பதினால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை டி20 உலககோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பேசி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா எதிர்வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக செயல்படப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : எதிர்வரும் இந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் நமது மிகப் பெரிய பலமாக இருப்பார். ஏனெனில் அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பலமே புதிய பந்தை ஸ்விங் செய்வதுதான். அவரால் போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அதேபோன்று போட்டியின் இறுதி நேரத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை வீழ்த்த என்கிட்ட சரியான பிளான் இருக்கு.. அவரை நிச்சயம் வீழ்த்துவேன் – நியூசி பவுலர் பேட்டி

எனவே அர்ஷ்தீப் சிங் தான் இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் நமது அணியின் துருப்பு சீட்டாக இருப்பார். ஏற்கனவே நமது அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா நம்மிடம் இருக்கும் நிலையில் அர்ஷ்தீப் சிங்கும் இணைவது மிகப்பெரிய சாதகம். இவர்கள் இருவருமே எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்தவே முயற்சிப்பார்கள் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -