
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றார். 2004இல் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தார். மேலும் கேப்டனாக அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராப்பியையும் இந்தியாவுக்காக வென்றார்.
அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் தோனி சாதனை படைத்துள்ளார். மேலும் அணியின் நலனுக்காக பெரும்பாலான கேரியரில் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் 17000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். மொத்தத்தில் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ஃபினிஷராக போற்றப்படுகிறார்.
ஆனால் அப்படிப்பட்ட மகத்தான அவரின் கேரியர் முடிந்த விதம் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. ஆம் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட், ரோஹித், ராகுல், ரிஷப் பண்ட், பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர். அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய தோனி காப்பாற்றப் போராடினார்.
அதில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தோனி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ட்டின் கப்டில் டைரக்ட் ஹிட் காரணமாக ரன் அவுட்டானது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதுவே தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது அவருடைய ரசிகர்களுக்கு இன்னும் வேதனையை கொடுக்கிறது.
இந்நிலையில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் தாம் கேப்டனாக இருந்திருந்தால் தோனியை 4வது இடத்தில் களமிறக்கியிருப்பேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி ரோஹித் தெரிவித்தது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் 4வது இடத்தில் தோனி பேட்டிங் செய்வது தான் அணிக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது”
இதையும் படிங்க: போற போக்கை பாத்தா சச்சினை முந்திடுவாரு போலயே.. ராகுல் ட்ராவிட்டை முந்திய ஜோ ரூட் 2 சாதனை
“ஆனால் தனிப்பட்ட முறையில் தோனி அப்போட்டியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” என்று 2019இல் தெரிவித்த கருத்து தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அவர் கூறுவது போல ரிஷப் பண்ட்க்கு பதிலாக தோனி 4வது இடத்தில் களமிறங்கியிருந்தால் செட்டிலாக் இன்னும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கலாம். இருப்பினும் அப்போதைய கேப்டன் விராட் கோலி அந்த விஷயத்தில் தவறு செய்தது இந்தியாவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.