
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் ஜனவரி 19ஆம் தேதி நேற்று நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களை உருவாக்கிய அம்மைதானம் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றது போன்ற பல வரலாற்றுப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. அத்தகைய பெருமையை மிகுந்த அந்த மைதானத்தின் 50வது வருட விழாவை மும்பை வாரியம் நடத்தியது.
அந்த நிகழ்ச்சியில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, டயானா எடுல்ஜி, திலிப் வெங்சர்கார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் அந்த விழாவில் பங்கேற்றார்கள். மும்பை வாரியத்தின் நிர்வாகிகள் மற்றும் சில உள்ளூர் ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்.
அந்த நிகழ்வில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது சாம்பியன்ஸ் டிராபியை மேற்குறிப்பிட்டவர்கள் மேடையில் அறிமுகம் செய்தார்கள். அப்போது கோப்பை அருகே நீங்கள் வந்து நில்லுங்கள் என்று ரோஹித் சர்மாவிடம் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும் தம்மை விட வயதில் மூத்தவரும் அனுபவத்தில் உயர்ந்தவருமான கவாஸ்கரிடம் நீங்களே அருகில் நில்லுங்கள் என்று ரோகித் சர்மா பணிவுடன் சொல்லி விட்டார். அதை ஏற்றுக்கொண்ட கவாஸ்கர் கோப்பை அருகில் நின்றார். அவரது அருகில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நின்றார். ரோகித் சர்மா மற்றும் ரகானே ஆகியோர் இருபுறங்களிலும் பக்கவாட்டு ஓரத்தில் அடக்கமாக நின்றார்கள்.
அந்த நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் ட்ராபியை 140 கோடி இந்திய மக்கள் ஆசிர்வாதத்துடன் வெல்லாமல் விட மாட்டோம் என்று ரோகித் சர்மா உறுதியாக தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் மற்றொரு தொடரில் களமிறங்க உள்ளோம். துபாய்க்கு நாங்கள் செல்லும் போது 140 கோடி மக்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு பின்னே இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்”
இதையும் படிங்க: 27 கோடிக்கு வாங்கியது மட்டுமில்லால் இந்த ஆண்டு ரிஷப் பண்டிற்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ
“அது எங்களுக்குத் தெரியும். இந்தக் கோப்பையை மீண்டும் வான்கடே மைதானத்திற்கு வீட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்” என்று கூறினார். கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி வெற்றி கண்டது. அதன் பின் 12 வருடங்கள் கழித்து இம்முறை இந்தியா சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.