- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அமைதியா இருக்க இந்தியாவை சீண்டுனா அவங்க சும்மா விட மாட்டாங்க.. ஆஸியை எச்சரித்த ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த போட்டியின் முதல் நாள் மாலை வேளையில் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தினார். அப்போது இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா என்னவாயிற்று என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதற்கு எதிர்ப்புறம் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி சில வார்த்தைகளை பேசினார். அதனால் கோபமடைந்த பும்ரா அவருக்கு பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் வாக்குவாதத்தை நிறுத்தினார். அதற்கடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே அவரிடம் திரும்பி முறைத்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்தியாவை சீண்டாதீங்க:

அது போக விராட் கோலி தலைமையில் மற்ற இந்திய வீரர்களும் சாம் கோன்ஸ்டஸ்க்கு வெறித்தனமான பதிலடியை கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணியினர் பொறுமையாக அமைதியாக இருக்கக்கூடியவர்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் தேவையின்றி சீண்டினால் 11 வீரர்களும் சேர்ந்து மொத்தமாக வந்து பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரோகித் பேசியது பின்வருமாறு. “எங்கள் பையன்கள் எதிரணி அமைதியாக இருக்கும் வரை அவர்களும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஒருவேளை நீங்கள் வம்பிழுத்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். களத்தில் கிரிக்கெட்டை விளையாடுங்கள். இது போன்ற தேவையற்ற பேச்சுக்கள் நன்றாக இருக்காது”

- Advertisement -

ரோஹித் பதிலடி:

“எங்களுடைய வீரர்கள் கிளாஸ் நிறைந்தவர்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்” என்று கூறினார். முன்னதாக கடந்த போட்டியில் அறிமுகமான 19 வயதாகும் கோன்ஸ்டஸ் ஆரம்பத்திலேயே பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு சில சாதனைகளை படைத்தார். அதனால் அடுத்ததாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பும்ராவை அடிப்பேன் என்று அவர் சவாலும் விட்டார்.

இதையும் படிங்க: பேட்டிங் செய்யலாம்.. ஆனா பவுலிங்ல தான் பிரச்சனை இருக்கு – பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவல்

மேலும் ஜெயஸ்வால் பேட்டிங் செய்த போது அருகில் தேவையின்றி பேசிய அவர் ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக பந்தை அவர் மீது அடித்து பதிலடி கொடுத்தார். தற்போது அமைதியாக இருக்கக்கூடிய பும்ராவிடம் அவர் சேட்டையை செய்தார். அதனால் மொத்த இந்திய அணியினரும் சேர்ந்து அப்படி பதிலடி கொடுத்தார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -