ஃபைனலில் 30 பந்தில் 30 ரன்ஸ்.. என்ன செய்றதுன்னே தெரியல.. அப்போ தான் இதை செஞ்சோம்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது. ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி கண்டது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டது.

முன்னதாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற ஃபைனலில் 177 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 31, ஹென்றிச் க்ளாஸென் 52 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். அதனால் கடைசி 30 பந்துகளில் தென்னாபிரிக்காவுக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அப்போது 16, 18வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அழுத்தமான தருணம்:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அச்சுறுத்தலை கொடுத்த க்ளாஸென் 17வது ஓவரின் முதல் பந்திலேயே பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அப்படியே 19வது ஓவரை அர்ஷ்தீப் சிங் கச்சிதமாக வீசிய நிலையில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்டியாவின் முதல் பந்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை அபாரமாக பிடித்த சூரியகுமார் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் தாம் காலியாக இருந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் தாம் அதிகமாக சிந்திக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இதர இந்திய வீரர்களும் பதறாமல் போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ஆம் அந்த நேரத்தில் நான் காலியாக இருந்தேன். அதே சமயம் அதிகமாக சிந்திக்கவில்லை. அப்போது நிகழ்காலத்தில் இருந்து கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துவது முக்கியமாக இருந்தது. நாங்கள் அனைவருமே பதறாமல் எங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது முக்கியமாக இருந்தது”

இதையும் படிங்க: ஊதி பெருசாக்கிடாங்க.. ராகுலை வெச்சு ஜெய்க்க முடியாது.. லக்னோ அவங்கள கேப்டனா போடணும்.. மிஸ்ரா வெளிப்படை

“தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். அந்த சமயத்தில் வீசிய 5 ஓவர்களும் எந்தளவுக்கு நாங்கள் அழுத்தத்திலும் அமைதியாக இருந்தோம் என்பதை காட்டுகிறது. நாங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் வேலையில் கவனம் செலுத்தினோம். அந்த சமயங்களில் நாங்கள் பதறவில்லை. அது தான் உங்களுடைய வெற்றிக்கு நல்ல விஷயமாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement