2வது டெஸ்டில் கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? சர்பராஸ் தொடர்ந்து வாய்ப்பு பெறுவாரா? கேப்டன் ரோஹித் பதில்

Rohit Sharma 4
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 36 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஒரு வெற்றியைப் பெற்று நியூசிலாந்து சாதனை படைத்தது. அதன் காரணமாக இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சமீப காலங்களாகவே நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சுமாராக விளையாடி வருகிறார். அதன் காரணமாக ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவத்தை மதித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வாய்ப்பில் வங்கதேச தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ராகுல் இந்தப் போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

ராகுல் நீக்கப்படுவாரா:

குறிப்பாக 46க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ரோஹித், விராட், சர்பராஸ், ரிஷப் பண்ட் ஆகியோர் போராட்டத்தால் வெற்றியை நெருங்கியது. ஆனால் அப்போது களமிறங்கிய கேஎல் ராகுல் 12 ரன்களில் அவுட்டானதால் 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ராகுலை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் சதமடித்து அசத்திய சர்பராஸ் கானுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே தெளிவாக சொல்லியும் சுமாராக விளையாடிய ராகுல் விரைவில் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் ஒவ்வொரு போட்டிக்குப் பின்னும் தனிநபர் வீரர்களை பற்றி பேசும் நபர் கிடையாது. எங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கு கேரியரில் எங்கே நிற்கிறோம் என்பது தெரியும். எனவே ஒரு போட்டி அல்லது ஒரு தொடரை வைத்து நாங்கள் எங்களுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டோம். ஆரம்பத்திலேயே நாங்கள் ஒவ்வொருவரிடமும் தெளிவான மெசேஜ் கொடுத்துள்ளோம்”

ரோஹித் விளக்கம்:

“அதனால் நாம் அணியில் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் பேசியதிலிருந்து இங்கே நான் வித்தியாசமாக எதுவும் பேசப் போவதில்லை. உண்மையில் இது மிகவும் எளிது. அதாவது வாய்ப்பு கிடைக்கும் யாராக இருந்தாலும் அதை பயன்படுத்தி அணிக்காக போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க: 197 விக்கெட்ஸ்.. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல.. அஸ்வினை நம்பாமல் வெற்றியை கோட்டை விட்ட ரோஹித்

“இந்த எளிமையான மெசேஜை பற்றியே நாங்கள் பேசுகிறோம். இது போன்ற வீரர்கள் எங்களுக்காக விளையாட காத்திருப்பது நல்லது. சுப்மன் கில் இப்போட்டியில் விளையாடாதது துரதிஷ்டம். அதற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் பெரிய சதம் அடித்தது அணிக்கான நல்ல அறிகுறி” என்று கூறினார்.

Advertisement