- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 நாளில் 3 மேட்ச்.. பரபரப்பில் எங்க பசங்க வித்யாசத்தை ஏற்படுத்துவாங்க.. கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் விளையாடிய அந்த சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் லீக் சுற்றுடன் சுமாராக விளையாடி வெளியேறியது. மறுபுறம் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. அந்த சுற்றில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் இருபதாம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதை முடித்துக் கொண்டு வங்கதேசத்தை ஜுன் 22ஆம் தேதி இந்திய அணி சந்திக்கிறது.

- Advertisement -

இந்தியா தயார்:
இறுதியாக ஜூன் 24 ஆம் தேதி வலுவான ஆஸ்திரேலியாவை தங்களுடைய 3வது சூப்பர் 8 போட்டியில் இந்தியா சந்திக்கிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் 6 நாட்கள் இடைவெளியில் 3 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுவது இந்திய அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் அதில் வித்தியாசத்தை ஏற்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுக்க அனைத்து இந்திய வீரர்களும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்த சுற்றில் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டுமென்ற ஆர்வம் எங்களுடைய அணியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. அதில் அசத்துவதற்கு எங்களுடைய திறமையை நாங்கள் முழுமையாக எடுத்துக் கொள்கிறோம்”

- Advertisement -

“ஒவ்வொரு பகுதியிலும் சாதிக்க ஏதேனும் ஒரு திறன் இருக்கிறது. இந்த சுற்றில் முதல் ஆட்டத்தை விளையாடியதும் அடுத்த 2 போட்டிகளை அதற்கடுத்த 3 – 4 நாட்களில் விளையாட உள்ளோம். அது கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பழகி விட்டோம். நாங்கள் நிறைய பயணம் செய்து விளையாடுகிறோம். எனவே இதை தவிர்க்க முடியாது. முதல் போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானத்தில் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம்”

இதையும் படிங்க: ஆஸி கிடையாது.. சூப்பர் 8இல் அந்த டீம் இந்தியாவை தோற்கடிக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க.. ஹர்பஜன் பேட்டி

“அங்கே எங்கள் வீரர்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளனர். எனவே சூப்பர் 8 போட்டிகளுக்காக நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் 3 சூப்பர் 8 போட்டிகளும் முறையே பார்படாஸ், ஆண்டிகுவா மற்றும் செயின்ட் லூசியா நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -