என்னோட கேரியரின் லோயஸ்ட் பாய்ண்ட்.. ஜீரணிக்க முடியல.. தோல்விக்கு இது தான் காரணம்.. ரோஹித் வருத்தம்

Rohit Sharma
- Advertisement -

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோற்றது. அத்துடன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் முழுமையாக இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் முடிந்தளவுக்கு நன்றாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் நியூசிலாந்தின் 20 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பாக நியூசிலாந்து. ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

லோயஸ்ட் பாய்ண்ட்:

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட நிறைய வெற்றிகளை கண்ட தம்முடைய இந்திய கேரியரில் இதுவே லோயஸ்ட் பாய்ண்ட் என்று ரோஹித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார். இதை எளிதாக ஜீரணிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கும் அவர் தோல்விக்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “சொந்த மண்ணில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது என்னுடைய கேரியரின் மிகவும் லோயஸ்ட் பாயிண்ட்”

“கேப்டனாக இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே நான் எனது திறமைகளுக்கு சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங்கிலும் நான் போதுமானதாக செயல்படவில்லை. டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திப்பது எளிதல்ல. அதை எளிதாக ஜீரணிக்கவே முடியாது”

- Advertisement -

ஜீரணிக்க முடியல:

“இருப்பினும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நியூசிலாந்து எங்களை விட நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். முதல் இரண்டு போட்டிகளில் முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. அதனாலேயே நாங்கள் போட்டியிலிருந்து பின்தங்கினோம்”

இதையும் படிங்க: தோல்விக்கு அதை காப்பியடித்த கம்பீர் தான் காரணம்.. இந்தியா டிராவிட்டை மிஸ் பண்ணுவாங்க.. பசித் அலி

“3வது போட்டியிலும் நாங்கள் சுமார் 30 ரன்கள் முன்னிலை பெற்றதால் நோக்கிச் செல்வோம் என்று நினைத்தேன். அதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கும் எட்டக்கூடியது. ஆனால் எனது மனதில் இருந்ததை செய்ய முடியாததால் அது தற்போது பார்ப்பதற்கு நன்றாக தெரியவில்லை. இந்த தொடருக்காக எனது மனதில் சில ஐடியாக்களை வைத்திருந்தேன். ஆனால் அது நினைத்தது போல் வரவில்லை. எனவே அது ஏமாற்றத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement