அவங்க இப்படி சொல்லி தான் தோத்துட்டு போனாங்க.. ஜாலி பண்ணட்டும்.. வங்கதேச சவாலுக்கு ரோஹித் பதில்

Rohit Sharma
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் தோற்கடித்து வங்கதேசம் வரலாறு படைத்தது.

அந்த உத்வேகம் மற்றும் தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை பயன்படுத்தி இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று சாண்டோ சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் உலகின் அனைத்து அணிகளும் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த விரும்புவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக வங்கதேசத்தை விட பலமான இங்கிலாந்து கடந்த சில மாதங்களுக்கு முன் பல சவால்களை விடுத்ததாகவும் ரோஹித் கூறியுள்ளார்.

- Advertisement -

பேசட்டும் விடுங்க:

ஆனால் கடைசியில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றதைப் போல இத்தொடரையும் இந்தியா வெல்லும் என்று ரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு அணியும் இந்தியாவை தோற்கடிப்பதை விரும்புவார்கள். வங்கதேசத்தையும் ஜாலியாக இருக்க விடுங்கள்”

“நாங்கள் போட்டியை வெல்வதற்காக இங்கே இருக்கிறோம். அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி நாங்கள் நினைக்க வேண்டியதில்லை. இங்கிலாந்து இங்கே வந்த போது நிறைய விஷயங்களை சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் வெற்றிகளை பெற வேண்டும். அது தான் இங்கேயும் எங்களுடைய இலக்காகும்”

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“சமீபத்தில் இந்தியா நிறைய அணிகளுக்கு எதிராக விளையாடியது. எதிரணிகளைப் பற்றி சிந்திக்காமல் ஒன்றாக சேர்ந்து வெல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் பெரியது. நாட்டுக்காக விளையாடும் போது ஒத்திகை பார்ப்பதற்கு இடமில்லை. ஏனெனில் இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் அங்கமாக நடைபெற உள்ளது”

இதையும் படிங்க: கே.எல் ராகுலா? சர்பராஸ் கானா? யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு – கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

“அதனுடைய ஃபைனலுக்கு தகுதி பெற வாய்ப்புகள் திறந்துள்ளன. அதற்காக அதிகம் சிந்திக்காமல் வங்கதேச தொடரை வெல்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார். மேலும் இலங்கை தொடருக்கு பின் நீண்ட இடைவெளி இருந்தாலும் செப்டம்பர் 12 முதல் வங்கதேச தொடருக்காக சென்னையில் பயிற்சி எடுத்து வருவதாக ரோகித் கூறியுள்ளார். அத்துடன் பெரும்பாலான வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாடியதால் இந்திய அணி சுணக்கமில்லாமல் வங்கதேச தொடரில் விளையாடி வெல்லும் என்று ரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement