அஸ்வின், ஜடேஜா 2வது ஆஸி போட்டியிலாவது விளையாடுவார்களா? கேப்டன் ரோஹித் சர்மா சர்மா பதில்

rohit sharma 3
- Advertisement -

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா கம்பேக் கொடுத்துள்ளது.

அதே வேகத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணியை பயிற்சிப் போட்டியில் வீழ்த்திய இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றி காணும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அஸ்வின் – ஜடேஜா ஆகியோரை பும்ரா – கம்பீர் ஆகியோர் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 850க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்துள்ள அவர்கள் ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் 2 டெஸ்ட் ஆல் ரவுண்டர்களாக ஜொலிக்கிறார்கள்.

- Advertisement -

அஸ்வின் – ஜடேஜா:

இருப்பினும் ஆஸ்திரேலியாவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் ஒரு ஸ்பின்னர் மட்டுமே தேவைப்படும். அது போன்ற சூழ்நிலையில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அவர்களை விட அசத்திய வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்து இந்தியா வெற்றியும் கண்டது. ஆனால் தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளதால் அஸ்வின் – ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அதை வெளிப்படையாக மறுத்துள்ள ரோகித் சர்மா அடுத்த 4 போட்டிகளிலும் இதே போன்ற நிலைமை நீடிக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துரதிஷ்டவசமாக இந்த செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் முதல் போட்டியில் இல்லை. அவர்களைப் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்களை அணியில் எடுக்காமல் விடுவது மிகவும் கடினம்”

- Advertisement -

ரோஹித் பதில்:

“ஆனால் அது அணியின் நலனுக்காக அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும். சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதும் நாங்கள் அதை தொடர்வதற்கு பார்ப்போம். ஆனால் எஞ்சிய தொடர் முழுவதும் அவர்கள் நம்முடைய வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதை நான் பார்ப்பேன். ஏனெனில் அவர்களுடைய அனுபவத்தை குறைவாக மதிப்பிட முடியாது. அவர்கள் தரமான வீரர்கள்” என்று கூறினார்

இதையும் படிங்க: எங்களை மாதிரி இல்ல.. கில், பண்ட், ஜெய்ஸ்வாலுக்கு அதைப் பற்றி கவலையோ பயமோ இல்ல.. ரோஹித் பாராட்டு

அதாவது தேவை ஏற்படாதவரை அஸ்வின் – ஜடேஜாவுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று ரோகித் மறைமுகமாக கூறியுள்ளார். அதே சமயம் களத்தில் விளையாடா விட்டாலும் தங்களுடைய அனுபவத்தால் அவர்கள் பின்புலத்தில் இருந்து இந்திய அணிக்கு உதவுவார்கள் என்றும் ரோஹித் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அடுத்தப் போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement