- Advertisement -
ஐ.பி.எல்

இன்னும் 67 ரன்கள் அடித்தால் போதும்.. ஐ.பி.எல் தொடரில் 2 ஆவது வீரராக ரோஹித் சர்மா – படைக்கவிருக்கும் சாதனை

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் ஆட்டமானது இன்று ஜெய்ப்பூர் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

2 ஆவது வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்த இருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாட இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

அது குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை யாதெனில் : கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இதுவரை 269 போட்டிகளில் விளையாடி 29.62 ரன்கள் சராசரியுடன் 131 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 6933 ரன்களை குவித்துள்ளார்.

அதில் 46 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும். அதேபோன்று இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 27 ரன்கள் சராசரியுடனும், 151 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 305 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மேலும் 67 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். இவருக்கு முன்னதாக விராட் கோலி மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 7000 ரன்களை எட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : ரோஹித், கோலியும் இல்ல.. இது கிடைச்சும் இங்கிலாந்தில் 30 ஆவேரேஜில் முடிக்காதீங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

அதேபோன்று இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 278 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அவருக்கு அடுத்து ரோஹித் சர்மா இன்று தனது 270-வது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -