ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சிக்கு கவுதம் கம்பீரால் வரப்போகும் பிரச்சனை – கம்பீரின் முடிவு என்ன?

Rohit and Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் தலைமையில் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இழந்தது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்திருந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி குறித்த முடிவை எடுக்கப்போகும் கம்பீர் :

அதன் பின்னர் இனி ரோகித் சர்மா டெஸ்க் கேப்டன் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. ஆனாலும் எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய ரோகித் சர்மா இந்திய அணிக்கு வெற்றிகரமாக கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தொடர்ந்து அவரே கேப்டனாக நீடிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது. அதோடு தான் தற்போதைக்கு ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சர்மா அறிவித்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாகவும் அவரே அறிவிக்கப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வாளர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடர் முடியும் வரை கால அவகாசம் உள்ளதால் அதன்பிறகு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. என்னதான் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி கொடுத்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை கௌதம் கம்பீரின் பார்வை வேறொன்றாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியை கருத்தில் கொண்டு அவர் புதிய கேப்டனை கொண்டுவர யோசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ரோகித் சர்மா கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முழுவதும் வரை அவரால் விளையாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : துணைக்கேப்டனாக நான் ஏதாவது மாற்றங்கள் சொன்னா தோனி இதைதான் செய்வாரு – விராட் கோலி பகிர்வு

இதன் காரணமாக நிலையான ஒரு கேப்டனை தற்போது இருந்தே தயார்படுத்த வேண்டும் என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய கேப்டனை கொண்டுவர கம்பீர் மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் யோசித்து வருவதாகவும் இதன் காரணமாக ரோகித் சர்மா கேப்டன் பதவியை இழக்க நேரிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement