IND vs WI : அணி நிர்வாகம் மீது தப்பில்ல, ரோஹித் அடிக்கடி காயமடைவதே தேவையற்ற மாற்றங்களுக்கு காரணம் – பாக் வீரர் கருத்து

Rohith
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்களும் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

IND vs WI

- Advertisement -

அதை தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழக்க இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்கள் எடுத்து பினிசிங் செய்து வெற்றி பெற வைத்தார். இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 11* (5) ரன்களை அதிரடியாக எடுக்கத் துவங்கிய போது முதுகு பிடிப்பு காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். அவரது இடத்தில் பொறுப்புடன் செயல்பட சூர்யகுமார் யாதவ் முதல் 2 போட்டிகளில் தடுமாறினாலும் இப்போட்டியில் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

மாற்றங்களும் காயமும்:
சமீபத்திய தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் இஷான் கிசான், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வாய்ப்பு பெற்ற நிலையில் இந்த தொடரில் சம்பந்தமே இல்லாமல் மிடில் ஆர்டரில் விளையாடக் கூடிய சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அது போக இந்த வருடம் இதுவரை முடிந்த 7 மாதத்தில் 7 வெவ்வேறு கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தி வருவதும் நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்துக்கும் 2017க்குப்பின் 2021 வரை தொடர்ந்து கேப்டனாக செயல்பட்ட விராட் கோலிக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அடிக்கடி காயமடைவதும் இடையிடையே ஓய்வு எடுப்பதுமே முக்கிய காரணமாகிறது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரான தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை தவறவிட்ட அவர் ஐபிஎல் முடிந்ததும் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டிக்கு முன்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியேறினார்.

- Advertisement -

ரோஹித்தே காரணம்:
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்த அவர் தற்போது மீண்டும் காயமடைந்துள்ள நிலையில் எஞ்சிய 2 டி20 போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய தொடர்களில் இந்திய அணியில் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் வரிசையில் நிகழ்த்தப்படும் தேவையற்ற மாற்றங்களுக்கு ரோகித் சர்மா அடிக்கடி காயமடைவதே காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கணித்துள்ளார்.

Butt

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்குமென்று எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் ரோகித் சர்மா அடிக்கடி காயமடைவதை அணி நிர்வாகம் கருத்தில் கொண்டுள்ளது. சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அடிக்கடி காயமடைகிறார்”

- Advertisement -

“அவர் இந்திய அணியில் பல்வேறு காரணங்களுக்காக வருவதும் போவதுமாக இருக்கிறார். எனவே அவர் இல்லாத சமயத்தை ஈடுசெய்ய நீங்கள் 2 – 3 வீரர்களை மனதளவில் தயாராக வைத்திருக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அடிக்கடி வீரர்கள் மாற்றப்படும் நிகழ்வும் நடைபெறுகிறது. கேஎல் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் நல்லபடியாக இருந்தால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஆனால் அவர்கள் தயாராக இல்லையெனில் அந்த நிலைமையை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

INDIA IND vs ENG Rohit Sharma

இருப்பினும் இந்த மாற்றங்களால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதில் தரமான வீரர்களை கண்டறியும் பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளதால் இந்திய அணி நிர்வாகம் செய்யும் மாற்றங்களுக்கு சல்மான் பட் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: தோனியின் அந்த கேப்டன்ஷிப் அணுகுமுறையே 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் – பின்னணியை பகிரும் முன்னாள் வீரர்

“ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா மாற்றங்களை செய்வதால் ஒரு புதிய வீரருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கப்படுவதால் பேட்டிங் வரிசை சரி படுத்தப்படுகிறது. அவர்கள் தங்களது பலவீனங்களையும் வீரர்களின் பலங்களையும் கண்டறிகிறார்கள். இது பெஞ்சில் உள்ள வீரர்களையும் தரமானவர்களாக உருவாக்குவதற்கு உதவுகிறது” என்று கூறினார்.

Advertisement