- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AUS : கோபத்தை காட்டிய அவரா இது – டிகே’வை மதித்த ரோஹித் சர்மா, ரசிகர்கள் பாராட்டும் வீடியோ உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா சொந்த மண்ணில் மீண்டும் தங்களை வலுவான அணி என்று நிரூபித்துள்ளது. மொகாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்து தலை குனிந்த இந்தியா நாக்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் செப்டம்பர் 25ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் சரியான பந்து வீச்சில் 200 ரன்களை தொட முடியாமல் 186/7 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 52 (21) ரன்களும் டிம் டேவிட் 54 (27) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ராகுல், ரோஹித் ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 69 (36) ரன்களும் நிதானமாக பேட்டிங் செய்த விராட் கோலி 63 (48) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ரோஹித்தின் செயல்:
இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 25* (16) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவரில் 187/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் அந்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்று இத்தொடரில் மீண்டெழுந்துள்ள இந்தியா மீண்டும் வெற்றி நடை போடத் துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் கேட்ச்சை சரியாக பிடித்தும் சத்தமாக அப்பீல் செய்யாத காரணத்தால் தினேஷ் கார்த்திக் மீது கேப்டன் ரோஹித் சர்மா விளையாட்டாக கோபத்தை வெளிப்படுத்தியது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அந்த நிலையில் இது போன்ற வெற்றிகளைப் பெறும் போது அதற்குப் பரிசாக வழங்கப்படும் வெற்றி கோப்பையை அணியில் இருக்கும் இளம் வீரரின் கையில் ஒப்படைக்கும் வழக்கத்தை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உருவாக்கினார்.

- Advertisement -

அதை விராட் கோலி பின்பற்றிய நிலையில் தற்போது ரோகித் சர்மாவும் பின்பற்றி வருவதை நாம் அறிவோம். அந்த நிலையில் இத்தொடரின் வெற்றிக்காக வழங்கப்பட்ட வெற்றி கோப்பையை கையில் வாங்கிய ரோகித் சர்மா நேராக தற்போதைய இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களிலேயே மிகவும் மூத்த வீரரான தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கையில் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இந்த தொடரில் எந்த இளம் இந்திய வீரரும் அறிமுகமாக களமிறங்காத நிலையில் 37 வயதிலும் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரரை போல அட்டகாசமாக செயல்படும் தினேஷ் கார்த்திக்கை இளம் வீரராக நினைத்து வெற்றிக் கோப்பையை ரோகித் சர்மா கொடுத்தார்.

ஆனால் மூத்த வீரராக இருக்கும் தம்மை விட வேறு ஏதேனும் இளம் வீரர் தான் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோப்பையை தினேஷ் கார்த்திக் வாங்க மறுத்தார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் “உங்களைவிட இளமையானவர் யாரும் இருக்க முடியாது” என்பது போல் கடைசி வரை கோப்பையை கையில் ஒப்படைத்தனர்.

- Advertisement -

இறுதியில் அவர்களது அன்பை மறுக்க முடியாத தினேஷ் வெற்றிக் கோப்பையை வாங்கி தலைமீது உயர்த்தி கொண்டாட்டத்தை ஆரம்பித்த போது எஞ்சிய இந்திய வீரர்களும் வெற்றியை கொண்டாடினர். சமீப காலங்களாகவே சக வீரர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியதால் அதிருப்தியை வாங்கிக் கட்டிக் கொண்ட ரோகித் சர்மா தம்மைவிட சீனியரான தினேஷ் கார்த்திக்கிடம் கோப்பையை கொடுத்து மதித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : எதாவது செய்ஞ்சி என்னை ஆட வையுங்க. ஜுரத்தால் கஷ்டப்பட்டும் விளையாடிய – இந்திய வீரர்

இதை பார்த்த ரசிகர்கள் மொகாலியில் கோபத்தைக் காட்டிய ரோஹித் சர்மாவா இது என்ற ஆச்சரியமடைவதுடன் இனிமேலாவது இது போல் சக அணி வீரர்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறுகின்றனர்.

- Advertisement -
Published by