இந்திய வீரர் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்தார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா கேப்டனாக வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அதே வருடம் இதே நாளில் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் பலரையும் போல அவரும் கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.
இருப்பினும் அப்போதைய கேப்டன் தோனி கொடுத்த தொடர்ச்சியான ஆதரவை பயன்படுத்திய விராட் கோலி குறுகிய காலத்திலேயே மேட்ச் வின்னராக அவதரித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் இதுவரை 26,000+ ரன்கள் 80 சதங்கள் விளாசி இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2013இல் ஓய்வு பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அவர் வருகிறார் என்று சொல்லலாம்.
வாழ்த்திய ரோஹித்:
அந்த வரிசையில் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும் 2017 – 2021 வரை முழுநேர கேப்டனாக செயல்பட்ட அவருடைய தலைமையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை பெற்ற இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வம் ஆகியவற்றை யாராலும் பொருத்த முடியாது என கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். அத்துடன் 2022 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பெற்றுக் கொடுத்தது போன்ற மகத்தான வெற்றிகளை மார்க்கெட்டில் வாங்க முடியாது என்றும் ரோஹித் பாராட்டியுள்ளார்.
ஏனெனில் அந்தளவுக்கு அழுத்தமான சூழ்நிலையில் விராட் கோலி அசத்தக்கூடியவர் என்று ரோகித் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய பசி மற்றும் ஆர்வம் முடியாதது என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு முறையும் அவர் அனைத்து நேரமும் களத்திற்கு வித்தியாசமான எனர்ஜியுடன் வருவதை நீங்கள் பார்ப்பீர்கள். அவரால் அணிக்காக மேஜையில் பல்வேறு விஷயங்களை கொண்டு வர முடியும்”
இதையும் படிங்க: கோலி கிடையாது.. ஆஸ்திரேலியாவில் அந்த இந்திய வீரரை சாய்க்க பிளான் பண்றேன்.. நேதன் லயன் பேட்டி
“இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள அவரிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது இது போன்ற போட்டிகளை உங்களால் மார்க்கெட்டுக்கு சென்று வாங்க முடியாது. அது தடுமாற்றம் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் தான் நடக்கும். அவற்றை செய்த விராட் கோலிக்கு நான் வாழ்த்துகிறேன். ஒரு முறையும் அவருடைய ஆட்டம் வித்தியாசமான லெவலில் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்” என்று கூறினார்.



